போலி லாட்டரி சீட்டு விற்ற மூவர் கைது

போலி லாட்டரி சீட்டு விற்ற     மூவர்  கைது
X
குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.

போலி லாட்டரி சீட்டு விற்ற

மூவர் கைது

குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்ற

மூவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல், ஆகியோர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். குமாரபாளையம் பழைய காவேரி பாலம், ரிலையன்ஸ் பங்க் அருகில், ஓலப்பாளையம் ரேசன் கடை அருகில் ஆகிய இடங்களில் போலி லாட்டரி விற்பது தெரியவந்தது. நேற்று மாலை 02:00 மணியளவில் நேரில் சென்ற போலீசார், வெள்ளை தாள்களில் நம்பர்கள் எழுதி, போலி லாட்டரி விற்ற கலைமகள் வீதியை சேர்ந்த கோபிநாத், 30, சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன், 53, காவேரி நகரை சேர்ந்த சீனிவாசன், 63, ஆகிய மூவரை, போலீசார் கைது செய்து, நம்பர்கள் எழுதிய வெள்ளை தாள்கள் தலா 5 பறிமுதல் செய்தனர்.


Next Story
ai automation in agriculture