புறவழிச்சாலையில் நீர் தேங்கியதால், வாகனங்கள் செல்ல சிரமம்

புறவழிச்சாலையில் நீர் தேங்கியதால், வாகனங்கள் செல்ல சிரமம்
X

சேலம் கோவை புறவழிச்சாலையில் நீர் தேங்கியதால்,வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில் நீர் தேங்கியதால்,வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதனால் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டு வருகிறது.

இதன் சாலை மிக குறுகியதாக இருப்பதால், அனைத்து வாகனங்களும் மெதுவாகத் தான் சென்று வருகின்றன. இந்த பகுதியில் உள்ள டி-மார்ட் எனும் வணிக வளாகம் அருகே சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்கள் செல்ல தடுமாறும் நிலை ஏற்படுகிறது.

மேலும் சர்வீஸ் சாலை இணைப்பு சாலையும் இதே இடத்தில் இருப்பதால், வழிந்தோடும் நீர், அங்குள்ள மண் தடத்தில் கலந்து சேறும், சகதியுமாக மாறி, பலரும் கீழே விழுந்து காயமடையும் நிலையுடன், விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, நீரை வடிய செய்து, போக்குவரத்து சீராக நடந்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். .


Tags

Next Story
why is ai important to the future