நிதி நிறுவன ஊழியர்களின் ஆபாச வார்த்தைகளால், மனம் உடைந்த பெண் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!
நிதி நிறுவன ஊழியர்களின் ஆபாச வார்த்தைகளால், மனம் உடைந்த பெண் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.
குமாரபாளையம் அருகே நிதி நிறுவன ஊழியர்களின் ஆபாச வார்த்தைகளால், மனம் உடைந்த பெண் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம் அருகே உள்ள குப்பாண்டபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் கட்டிடக் கூலி தொழிலாளி கோபி, 39. இவரது மனைவி தனக்கொடி, 35. இவர் விவசாய கூலி வேலைக்கு சென்று வருகிறார். தனக்கொடி தனது குடும்பச் செலவுக்கு போதிய வருமானம் இல்லாததால், சில நிதி நிறுவனங்களில் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்று வார தவணையாக செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக போதிய வருமானம் இல்லாததால், தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவன ஊழியர்கள் தனக்கொடியிடம், நேற்றுமுன்தினம் காலையில் தனக்கொடி வீட்டிற்கு வந்த நிதி நிறுவன ஊழியர்கள் இருவர், கட்டாயம் தனக்கொடி தவணையை இன்று செலுத்தியே ஆக வேண்டும் என வீட்டிற்கு முன் நின்று தகாத ஆபாச வார்த்தைகளில் பேசி உள்ளனர். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த தனக்கொடி, நேற்று மாலை 06:00 மணியளவில் திடீரென வீட்டிற்கு உள்ளே சென்று கதவை சாத்தியவர், நீண்ட நேரம் கடந்தும் கதவை திறக்கவில்லை. இரவு 08:00 மணியளவில் வீட்டிற்கு வந்த தனக்கொடியின் கணவர் கோபி, கதவைத் தட்டி பார்த்தும் தனக்கொடி, கதவை திறக்காத நிலையில், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த பொழுது தனக்கொடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து அவரது கணவர் கோபி குமாரபாளையம் போலீசில் தகவல் தெரிவித்ததன் பேரில், விரைந்து வந்த குமாரபாளையம் போலீசார், தனக்கொடி சடலத்தை கைப்பற்றி உடனடியாக, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu