குமாரபாளையத்தில் குழாய் பழுதானதால் வீணாகி வரும் குடிநீர்

குமாரபாளையத்தில் குழாய் பழுதானதால்   வீணாகி வரும் குடிநீர்
X

குமாரபாளையம் ஆனங்கூர் சாலை கோட்டைமேடு மேம்பாலம் அருகே கோம்பு பள்ளத்தின் மேற்பரப்பில் குடிநீர் குழாய் சேதமாகி நீர் வீணாகி வருகிறது.

குமாரபாளையத்தில் குழாய் உடைந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர் சாக்கடையில் கலந்து வீணாகி வருகிறது.

குமாரபாளையம் ஆனங்கூர் சாலை கோட்டைமேடு மேம்பாலம் அருகே கோம்பு பள்ளத்தின் மேற்பரப்பில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழாயில் ஏற்பட்ட பழுதால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் சாக்கடையில் கலந்து வீணாகி வருகிறது. பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று அருகே உள்ள தட்டான்குட்டை ஊராட்சி, குப்பாண்டபாளையம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் குடிநீர் எடுத்து வருவதை காண முடிகிறது.

இந்த குடிநீர் வீணாவதை தடுக்க பலமுறை இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனே இந்த குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story