/* */

குமாரபாளையம் பகுதியில் மே 16ம் தேதி பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம்

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் மே. 16ல் பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யபடுகிறது.

HIGHLIGHTS

குமாரபாளையம் பகுதியில் மே 16ம் தேதி பராமரிப்பு காரணமாக   மின் நிறுத்தம்
X

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் மே. 16ல் பராமரிப்பு மின் நிறுத்தம் பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது பற்றி பள்ளிபாளையம் மின் வாரிய செயற்பொறியாளர் கோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மே. 16ம் தேதி காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், மலையடிபாளையம், மஞ்சுபாளையம், எக்ஸல் கல்லூரி, குமாரபாளையம் மற்றும் காவேரி ஹைடெக் பார்க் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அடிக்கடி மின்வெட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

குமாரபாளையம் நகரில் அசைவ பிரியர்கள் அதிகமுள்ளனர். நகரில் பஸ் ஸ்டாண்ட் இடைப்பாடி சாலை, பவர் ஹவுஸ், ராஜம் தியேட்டர், காலனி மருத்துவமனை பஸ் நிறுத்தம், கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம், சின்னப்பநாயக்கன்பாளையம், காவேரி நகர் உள்ளிட்ட பல இடங்களில் கோழி, மீன் ஆட்டிறைச்சி உள்ளிட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. இதிலிருந்து கொட்டப்படும் கழிவுகளை காக்கை உள்ளிட்ட பறவையினங்கள் எடுத்து சென்று, மேலே உள்ள உயர் அழுத்த மின் கம்பியில் உட்கார்ந்து கொள்கிறது. இதனால் மின் தடை ஏற்படுகிறது. மின் தடை ஏற்பட்ட பகுதியிலிருந்து பொதுமக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் கொடுக்கும் புகாரையடுத்து, சம்பவ இடம் சென்று, கோழிக்கழிவுகளை மின் கம்பியிலிருந்து அகற்றி, மின் விநியோகம் சீர்படுத்தும் நிலையில் உள்ளோம். மின் தடை ஏற்பட்டால் எந்த ஏரியா என கண்டுபிடித்து போவதற்குள் கால நேரம் ஆகின்றது. அடிக்கடி மின் தடை என பொதுமக்கள் அதிருப்தியடையும் நிலையையும் கருத்தில் கொண்டுதான் கோடை வெப்பத்தை பொருட்படுத்தாமல் நகர் முழுதும் சுற்றி மின் விநியோகம் சீராக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

குமாரபாளையம் நகராட்சி, தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் உள்ள மின் விநியோக குறைகளை சரி செய்யும் பணியும் எங்களுக்கு உள்ளது. மின் பயன்பாடு குறித்து கணக்கீடு செய்தல், புதிய மின் இணைப்பு கொடுத்தல், உயர் அதிகாரிகளின் ஆலோசனை பெற, நடத்தப்படும் கூட்டங்களுக்கு செல்லுதல், மழையால் ஏற்படும் சேதங்களை சரி செய்தல், குறிப்பிட்ட மின் இணைப்பில் கம்பத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால், அங்கு சென்று அந்த ஏரியா மின் இணைப்பு துண்டித்து, மின் இணைப்பை சரி செய்தல் உள்ளிட்ட பல பணிகளையும் செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Updated On: 14 May 2023 10:43 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...