கடும் கோடை வெப்பம்: குமாரபாளையத்தில் நுங்கு விற்பனை ஜோர்

கடும் கோடை வெப்பம்: குமாரபாளையத்தில் நுங்கு விற்பனை ஜோர்
X

குமாரபாளையத்தில் நுங்கு விற்பனை ஜோராக நடைபெற்றது.

கடும் கோடை வெப்பம் காரணமாக குமாரபாளையத்தில் நுங்கு விற்பனை ஜோராக நடைபெற்றது

சித்திரை பிறந்தது முதல் கோடை வெப்பத்தின் தாக்குதல் அதிக அளவில் உள்ளது. குமாரபாளையத்தில் கோடை வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை நாடி செல்கின்றனர்.

அதே நேரத்தில் இயற்கை குளிர்பானங்களான இளநீர், நுங்கு, கரும்பு சாறு, தர்பூசணி, உள்ளிட்டவைகளை பொதுமக்கள் அதிகம் நாடி வாங்கி பருகி தாகத்தை தணித்து வருகின்றனர்.

குறிப்பாக நுங்கை குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பார்கள் என்பதால், பெரியவர்களும் அதிகம் நுங்கு வாங்குவதை காண முடிகிறது. இதனால் நுங்கு விற்பனை குமாரபாளையத்தில் அதிகரித்து காணப்படுகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!