குமாரபாளையம் பகுதியில் தொடர் மழையால் நிரம்பிய கிணறுகள்: மகிழ்ச்சியில் விவசாயிகள்

குமாரபாளையம் பகுதியில் தொடர் மழையால்   நிரம்பிய கிணறுகள்: மகிழ்ச்சியில் விவசாயிகள்
X

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை பகுதியில் தொடர்மழையால் விவசாய கிணறுகளில் நீர் நிரம்பியுள்ளது.

குமாரபாளையம் பகுதியில் தொடர் மழையால் கிணறுகள் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

குமாரபாளையம் பகுதியில் தொடர் மழையால் கிணறுகள் நிரம்பியுள்ளன.

குமாரபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை மற்றும் இரவில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் இல்லாமல் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர் மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கிணறுகளில் நீர் நிரம்பி காணப்படுகிறது. இது குறித்து விவசாயி விஸ்வநாதன் என்பவர் கூறியதாவது:-

மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் விடாத நிலையில், கிணற்றில் கூட நீர் இல்லாத நிலை ஏற்பட்டு, விவசாயம் செய்வது என்பது கேள்விக்குறியாக இருந்தது. தற்போது ஆகஸ்ட் முதல் தண்ணீர் வாய்க்காலில் வந்து கொண்டுள்ளது. மேலும் தற்போது மழையும் பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கிணறுகளில் நீர் நிரம்பியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா