குமாரபாளையம் அருகே போதை இளைஞர் காவிரி ஆற்றில் மூழ்கி சாவு

குமாரபாளையம் அருகே போதை  இளைஞர் காவிரி ஆற்றில் மூழ்கி சாவு
X

சித்தோடு காவல் நிலையம்.

குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் மது போதையில் இளைஞர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

குமாரபாளையம் அருகே சானார்பாளையத்தில் வசிப்பவர் சக்திவேல், 33. தன் நண்பர்கள் சிலருடன் மது அருந்தி விட்டு, காவிரியாற்றில் அம்மணியம்மாள் தோப்பு பகுதியில் குளித்துக்கொண்டிருந்தார். ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில் போதையில் ஆழமான பகுதியில் சக்திவேல் மூழ்கினார்.

அருகே குளித்துக்கொண்டிருந்த சக்திவேலை காணவில்லை என தேடி பார்த்தபோது, ஆழமான பகுதியில் சக்திவேல் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட நண்பர்கள் அவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சக்திவேலுக்கு வாசுகி என்ற மனைவியும், ஒரு மகன், மற்றும் ஒரும் மகள் உள்ளனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare