குமாரபாளையம் காவல் நிலையத்தில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஆட்டோ ஓட்டுனர்களுக்காக நடைபெற்ற போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் எஸ்.ஐ. மலர்விழி பேசினார்.
தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அறவே இருக்க கூடாது, போதை பொருட்கள் இல்லாத தமிழகம் என்ற திட்டத்தை அறிவித்து, மாநிலத்தின் அனைத்து பகுதியிலும் போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் அமல் படுத்த தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி குமாரபாளையம் பகுதியில் அரசு பள்ளிகளில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி, கூட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் எஸ்.ஐ. மலர்விழி பேசுகையில், போதை பொருட்கள் பயன்படுத்துவோர், விற்போர் குறித்து தகவல் கிடைத்தால் தெரியப்படுத்துங்கள். தகவல் தருபவர்கள் பெயர்கள் பாதுகாக்கப்படும். சட்டம், ஒழுங்கு மீறுவோர் மீது பாரபட்சமின்றி உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
எஸ்.ஐ. இளமுருகன், எஸ்.எஸ்.ஐ. சிவகுமார், தன்ராஜ், எட்டுகள் ராம்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu