குமாரபாளையத்தில் மருந்து வணிகர்கள் சங்க ஆலோசனை கூட்டம்: முப்படை தளபதிக்கு அஞ்சலி

குமாரபாளையத்தில் மருந்து வணிகர்கள் சங்க ஆலோசனை கூட்டம்: முப்படை தளபதிக்கு அஞ்சலி
X

 குமாரபாளையத்தில் நடைபெற்ற மருந்து வணிகர் சங்க ஆலோசனை கூட்டத்தில் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் உயிரிழந்த ராணுவ படையினருக்கும் மெழுகுவர்த்திகள் கைகளிலேந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

குமாரபாளையத்தில் நடைபெற்ற மருந்து வணிகர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

குமாரபாளையத்தில் தாலுகா அளவிலான மருந்து வணிகர் சங்க ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது.

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் உயிரிழந்த ராணுவ படையினருக்கும் மாவட்ட தலைவர் அன்பரசு, மாவட்ட செயலர் அன்பழகன் தலைமையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிபின் ராவத் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மருந்து ஆய்வாளர்கள் பிரபு, ராகவேந்தர் பங்கேற்று புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து வாழ்த்தி பேசினார்கள். புதிய ஆலோசகர்களாக ராஜேந்திரன், மெய்வேல், புதிய தலைவராக சேகர், செயலராக செந்தில்குமார், பொருளராக குமரவேல், துணைத்தலைவர்களாக நாகராஜன், குணசேகரன், பாலமுருகன், கனகராஜ், இணைச் செயலர்களாக சரவணன், கார்த்தி, மகேஷ், சரவணன் தேர்வு செய்யப்பட்டனர்.

மருந்து வணிகர்களை முன்களப்பணியாளர்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். டாக்டர் சீட்டே இல்லாமல் மருந்து பெறும் ஆன்லைன் வணிகத்தை தடை செய்ய வேண்டும். ஒவ்வொரு வாடிக்கையாளரை பார்த்து, அவரது உடல்நிலை அறிந்து, டாக்டர்கள் தரும் மருந்து சீட்டின்படி மருந்து வழங்கி வாழ்ந்து வரும் மருந்து வணிகர்கள் தொழிலை அரசு பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குமாரபாளையம் தாலுகாவிற்குட்பட்ட குமாரபாளையம், பள்ளிபாளையம், வெப்படை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மருந்து வணிகர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Tags

Next Story