போலீசார் சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி

போலீசார் சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி
X
குமாரபாளையத்தில் போலீசார் சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

போலீசார் சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி - குமாரபாளையத்தில் போலீசார் சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

குமாரபாளையத்தில் போலீசார், சிறு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்கம், அரசு கல்வியியல் கல்லூரி மற்றும் தமிழ் சிந்தனை பேரவை, சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரணியை கல்லூரி முதல்வர் அருணாசலம், இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.எஸ்.ஐ. மாதேஸ்வரன், சிறு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் பிரபாகரன், தமிழ் சிந்தனை பேரவை ரமேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தனர். கல்லூரி வளாகத்தில் துவங்கிய பேரணி, குளத்துக்காடு, திருவள்ளுவர் நகர், சேலம் சாலை, ஆனங்கூர் பிரிவு சாலை, பள்ளிபாளையம் பிரிவு சாலை வழியாக தம்மண்ணன் வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நிறைவு பெற்றது.

இதில் பிரபாகரன் பேசியதாவது:

தமிழகத்தில் ஹான்ஸ் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவதால் கேன்சர் பரவி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் போதை ஊசி தனக்குத்தானே செலுத்தி கொண்டு அதனால் ஏற்பட நரம்புத் தளர்ச்சியால் இளமையிலேயே இளைஞர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவற்றை தடுக்கும் நோக்கத்தில் இளைஞர்களுக்கு பொதுமக்களுக்கும் போதைகள் ஏற்படும் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. போலீசாருடன் பொதுமக்களும் சேர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கல்லூரி முதல்வர் அருணசாலம் பேசியதாவது:

நீங்கள் ஆசிரியராக பணியாற்ற உள்ள சூழ்நிலையில் உங்கள் மாணவர்கள் போதைக்கு அடிமையாகாமல் மீட்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஏ.டி.எம். கொள்ளையர்களை பிடித்து சாதனை செய்த இன்ஸ்பெக்டர் தவமணி உள்ளிட்ட போலீசாருக்கு சமூக விடிவெள்ளி விருது வழங்கப்பட்டது. சிறு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க செயலர் வேலுமணி, பொருளர் மாதேஸ்வரன், கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மனோகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

படவிளக்கம் :

குமாரபாளையத்தில் காவல்துறையினர், சிறு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்கம், அரசு கல்வியியல் கல்லூரி மற்றும் தமிழ் சிந்தனை பேரவை, சார்பில் நடந்த போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாதனை செய்த போலீசாருக்கு விருது வழங்கப்பட்டன.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அம்மன் கோவில்களில்   சிறப்பு வழிபாடு
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி
நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
கோவிலில் திருட முயன்ற திருடன் – நேரில் பிடிபட்ட பரபரப்பான தருணம்!
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம்: மின்தடை காரணம்
ai solutions for small business