அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக குமாரபாளையம் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி பங்கேற்று பேசினார். இவர் பேசியதாவது:

போதை பொருட்கள் விற்கும் நபர்கள், பள்ளி, கல்லூரி பகுதியில்தான் அதிகம் விற்று வருகின்றனர். இதனை மாணவர்கள் வாங்க வேண்டாம். இப்படிப்பட்ட நபர்களை உடனே போலீசில் ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் அந்த ஆட்களை சிறைக்கு அனுப்பி விடுவார்கள். போதை பொருட்கள் பழக்கத்தால் படிக்க முடியாத நிலை ஏற்படும். பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு கல்லூரிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் கனவு நீங்கள் நன்கு படித்து முன்னேற்றம் காண வேண்டும் என்பதுதான். அது இந்த போதை பழக்கத்தால் நிறைவேற முடியாமல் போகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

படவிளக்கம் :

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Next Story
ai solutions for small business