குமாரபாளையம் அரசு பள்ளிகளில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம், பேரணி

குமாரபாளையம் அரசு பள்ளிகளில் போதை  தடுப்பு விழிப்புணர்வு முகாம், பேரணி
X

குமாரபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை விழிப்புணர்வு குறித்து டி.எஸ்.பி. மகாலட்சுமி மாணவிகளிடம் பேசினார்.

குமாரபாளையம் அரசு பள்ளிகளில் நடைபெற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம், பேரணியில் போலீஸ் டி.எஸ்.பி. பங்கேற்றார்.

குமாரபாளையம் பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி தலைமை ஆசிரியர்கள் ஆடலரசு, சிவகாமி, இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருச்செங்கோடு டி.எஸ்.பி. மகாலட்சுமி பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார்.

மேலும் இரு பள்ளிகளிலும் உறுதிமொழி எடுத்துகொண்டனர். இதில் போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டோம், யாரையும் அடிமையாக விட மாட்டோம், என்பது உள்ளிட்ட வாசகங்களை கூறினார்கள். இதையடுத்து ராஜம் தியேட்டர் வாசலிலிருந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை டி.எஸ்.பி. மகாலட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மாணவ, மாணவியரிடம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

நகரின் முக்கிய சாலைகளின் வழியாக வந்த பேரணி நகராட்சி அலுவலகம் முன்பு நிறைவு பெற்றது. இதில் 75வது சுதந்திரதினத்தை நினைவு படுத்தும் விதமாக ராணுவ பீரங்கி போலவும், காந்தி, நேதாஜி, பாரதமாதா, பரதநாட்டிய கலைஞர் போல வேடமணிந்து மாணவ, மனைவியர் பங்கேற்றனர். போதை தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாதைகள் ஏந்தியவாறும், கோஷங்கள் போட்டவாறும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு குறித்து டி.எஸ்.பி. மகாலட்சுமி மாணவர்களுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!