திதி கொடுக்க வந்த மின்துறை உதவியாளர் காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி பலி

திதி கொடுக்க வந்த மின்துறை உதவியாளர் காவிரி   ஆற்றில் நீரில் மூழ்கி பலி
X

காவிரி ஆற்றில், தீயணைப்பு படையினர் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

குமாரபாளையத்தில், திதி கொடுக்க வந்த மின்வாரிய உதவியாளர், காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி பலியானார்.

மேட்டூரை சேர்ந்தவர் ரமேஷ், 45. மின்வாரிய உதவியாளர். இவர் தன் சித்தி சுப்புலட்சுமியின், காரியத்திற்கு குமாரபாளையம் வந்தார். நேற்று மாலை 03:30 மணியளவில் நகராட்சி அலுவலக காவிரி படித்துறையில், திதி மற்றும் பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றில் விடுவதற்காக ஆற்றில் இறங்கினார்.

சிறிது தூரம் சென்றதும் தண்ணீர் இவரை இழுத்து சென்றது. நிலை குலைந்த இவர், நீரில் மூழ்கினார். இது குறித்து குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தர, நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் வந்த படையினர், ரமேஷ் உடலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேடி, சடலத்தை மீட்டனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!