ஆம்புலன்ஸ் ஓட்டுனர் இறுதி ஊர்வலத்தில் தனியார் ஆம்புலன்ஸ்கள் ஊர்வலம்

குமாரபாளையம் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கோகுல்ராஜ் இறந்ததால், அவரது இறுதி ஊர்வலத்தில் தனியார் ஆம்புலன்ஸ்கள் ஊர்வலமாக வந்தன.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பி.எட். கல்லூரி சாலையில் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் வைத்து தொழில் செய்பவர் செல்வராஜ் (வயது 65.). இவரது மகன் கோகுல்ராஜ்,( 30.) தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர். மது குடித்து விட்டு அடிக்கடி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் இரவு 08:00 மணியளவில் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் போது குடித்து விட்டு வந்ததால், ஏன் இப்படி செய்கிறாய்? என தந்தை இவரை கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கோபம் கொண்டு, அருகே இருக்கும் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன்- க்கு சென்றுள்ளார். இரவு 11:00 மணியளவில் இவரது அம்மா கண்ணம்மாள் போய் பார்த்த போது, சிமெண்ட் அட்டை போடப்பட்ட அறையில், ஆங்கிளில் பெட்ஷீட்டால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அதிர்ச்சியில் சத்தம் போட அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து பெட்ஷீட்டை அறுத்து, உடலை கீழே இறக்கி, போக்கு வண்டியில் குமாரபாளையம் ஜி.எச். கொண்டு வந்து பார்த்த போது, இவரை பரிசோத்தித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறியுள்ளார். இவரது சடலம் சவக்கிடங்கில் வைக்கப்பட்டது.
நேற்று காலை குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து, பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர். அதன் பின் கோகுல்ராஜ் உடல், அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் குமாரபாளையம் மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது தனியார் ஆம்புலன்ஸ்கள் ஊர்வலமாக வந்தன.
படவிளக்கம் :
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu