குமாரபாளையம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்

குமாரபாளையம் அருகே குடிநீர் கேட்டு   காலி குடங்களுடன் சாலை மறியல்
X

குமாரபாளையத்தில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ள பொது மக்கள்.

குமாரபாளையம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஜீவா நகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் முறையாக செய்யபடவில்லை. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் முறையிட்டபோதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கோபமடைந்த ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் குமாரபாளையம் - நாமக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் திடீர் மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் காவல்நிலைய போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களை சமரசம் செய்தனர்.


அப்பொழுது ஒரு வாரமாக ஊராட்சி சார்பில் சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பல்வேறு இன்னல்கள் மற்றும் சிரமத்தை சந்தித்தாக குற்றச்சாட்டினர். ஊராட்சி மன்ற தலைவரிடம், ஊராட்சி பகுதியில், ஊராட்சி மன்ற அனுமதி இன்றி தன்னிச்சையாக குடியிருப்புகளில் குடிநீர் குழாய்களை அமைத்ததால்தான் போதிய நீர் வழங்க முடியவில்லை. எனவே,சட்டவிரோதமாக குடிநீர் குழாய் அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனையடுத்து ஜீவா நகர் பகுதிக்கு குடிநீர் வழங்க உடனடியாக ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது. கிராம மக்களின் சாலை மறியல் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Tags

Next Story