பல்லக்காபாளையத்தில் குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் கடும் அவதி

பல்லக்காபாளையத்தில் குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் கடும் அவதி
X

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதி மக்கள் குடிநீர் குழாய் உடைப்பால் மற்றொரு ஊராட்சிக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் அவலம் ஏற்பட்டு வருகிறது.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதி மக்கள் மற்றொரு ஊராட்சிக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் அவலம் ஏற்பட்டு வருகிறது.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதி மக்கள் மற்றொரு ஊராட்சிக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் அவலம் ஏற்பட்டு வருகிறது.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் ஊராட்சி குட்டிக்கிணத்தூர் பெருமாள்கோயில்காடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அருகில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எலந்தகுட்டை ஊராட்சி பகுதிக்கு சென்று இப்பகுதி மக்கள் தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

எங்கள் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல நாட்கள் ஆகியும், பல முறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் எவ்வித பலனும் இல்லை. ஒரு கி.மீ. தூரம் சென்று மற்றொரு ஊராட்சி பகுதியில் தண்ணீர் பிடித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு சென்றால், அப்பகுதி மக்கள், எங்கள் தண்ணீர் தேவை நிறைவு பெறாத நிலையில் நீங்களும் வந்து தண்ணீர் பிடித்தால் நாங்கள் எங்கே போவது? என கேட்கிறார்கள். மாவட்ட நிர்வாகத்தினர் இது குறித்து கவனம் செலுத்தி தண்ணீர் பிரச்சனை தீர்த்து வைத்து உதவ வேண்டுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!