காய்ந்துபோன மரத்தால் விபத்து ஏற்படும் அபாயம்..! பொதுமக்கள் அச்சம்..!
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் பெரிய அளவிலான மரம் காய்ந்த நிலையில் உள்ளது.
குமாரபாளையத்தில் முக்கிய சாலை அருகே இருக்கும் பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் பெரிய அளவிலான மரம் காய்ந்த நிலையில் உள்ளது. இதன் காய்ந்த கிளைகள் எதிரில் உள்ள வீடுகளின் மேல் பரவியது. அருகில் உள்ள நில அளவை தாசில்தார் அலுவலகம் மீதிலும் இதன் கிளைகள் படர்ந்தன. எந்நேரமும் ஒடிந்து விடும் நிலையில் உள்ளது.
இதனை அகற்ற ஆர்.டி.ஒ. வசம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில், நேரில் வந்து ஆர்.டி.ஒ. சுகந்தி ஆய்வு மேற்கொண்டு, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மரத்தை வெட்ட அறிவுறுத்தினார். ஆனால் இந்த மரம் இதுவரை வெட்டப்படாமல் உள்ளது. எந்நேரமும் ஒடிந்து, சாலையில் செல்வோர் மீது விழும் நிலையில் உள்ளதால், அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த பட்டுப்போன மரத்தை வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டு என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காய்ந்துபோன மரத்தின் எதிரில் பல குடியிருப்பு வீடுகளும் உள்ளன. அந்தப்பகுதியில் இருக்கும் மக்கள், குழந்தைகள் அந்தப்பகுதியில் நடமாடுவார்கள். எனவே அதிகாரிகள் உடனே அந்த காய்ந்த மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மரங்கள் நமக்கு சுற்றுச்சூழலை பேணுவதில் முக்கிய பங்காற்றுகின்றன. மேகங்கள் மூலமாக மழையை அறுவடை செய்வதற்கு மரங்கள் முக்கிய காரணியாக இருக்கின்றன. உயிர் மரங்களை வெட்டுவது தவறு. ஆனால் காய்ந்த மரங்களை விபத்து ஏற்படுவதற்கு முன்னர் அகற்றுவது முக்கியமாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu