குமாரபாளையம் அரசு பள்ளியில் என்.சி.சி. சார்பில் ஓவியப்போட்டி

குமாரபாளையம் அரசு பள்ளியில் என்.சி.சி. சார்பில்   ஓவியப்போட்டி
X

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்சிசி சார்பில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விடியல் ஆரம்பம் பொதுநல அமைப்பின் நிறுவனர் விடியல் பிரகாஷ், டாக்டர் செந்தில்குமார் பரிசுகள் வழங்கினார்கள்

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில் ஓவியப்போட்டிகள் நடைபெற்றன

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில் அமைதி மற்றும் ஒற்றுமை என்ற தலைப்பில் ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமை வகித்தார்.

ஈரோடு 15வது பட்டாலியன் கமாண்டிங் அலுவலர் லெப்டினன்ட் கர்னல் அணில் வர்மா வழிகாட்டுதல்படி, சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டு கால வரலாற்றில் உலக நாடுகளுக்கிடையே இந்தியா அமைதியையும், ஒற்றுமையையும் வலியுறுத்துகிறது என்பதை குறிப்பிடும் வகையில் என்.சி.சி. மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி போட்டிகளை துவக்கி வைத்தார். இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்கள் படைப்புகளை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அபெக்ஸ் சங்க தலைவரும், விடியல் ஆரம்பம் பொதுநல அமைப்பின் நிறுவனருமான விடியல் பிரகாஷ், டாக்டர் செந்தில்குமார் பங்கேற்று பரிசுகள் வழங்கினார்கள். பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!