வடிகால் பணிகள்: ஆய்வு செய்தார் குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன்

வடிகால் பணிகள்: ஆய்வு செய்தார் குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன்
X

குமாரபாளையம் கிழக்கு காலனி சுள்ளிமடை தோட்டம் பகுதியில் வடிகால் பணிகளை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன்  ஆய்வு செய்தார்.

குமாரபாளையத்தில் வடிகால் பணிகளை நகராட்சி தலைவர் விஜய் கண்ணன் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள், குப்பைகள் அகற்றுதல், பொதுமக்கள் புகார்கள் குறித்து நேரில் ஆய்வு செய்து தீர்வு காணுதல் ஆகியவற்றை செய்து வருகிறார். இதன்படி கிழக்கு காலனி சுள்ளிமடை தோட்டம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வடிகால் பணிகள் குறித்து சேர்மன் விஜய்கண்ணன் நேரில் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். கமிஷனர் விஜயகுமார், பொறியாளர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் அழகேசன், ஜேம்ஸ், வேல்முருகன், கனகலட்சுமி, கிருஷ்ணவேணி, சியாமளா, நந்தினிதேவி, ரேவதி நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!