களம் காண்போம் மகளிர் அணி புதிய உறுப்பினர் சேர்க்கை துவக்கம்

களம் காண்போம் மகளிர் அணி புதிய உறுப்பினர் சேர்க்கை துவக்கம்
X

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் களம் காண்போம் எனும் திட்டத்தின் அடிப்படையில் மகளிர் அணி புதிய உறுப்பினர் சேர்க்கை துவக்கப்பட்டது.

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் களம் காண்போம் திட்டத்தின் அடிப்படையில் மகளிர் அணி புதிய உறுப்பினர் சேர்க்கை துவக்கப்பட்டது.

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் மாநில மகளிர் அணி தலைவி கனிமொழி வழிகாட்டுதல் படி, களம் காண்போம் எனும் திட்டத்தின் அடிப்படையில், புதிய மகளிர் உறுப்பினர்கள் இணைய வழியில் சேர்க்கும் பணி, குமாரபாளையம் நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் தலைமையில் 3வது வார்டு பகுதியில் துவங்கியது. இது பற்றி செல்வம் கூறியதாவது:

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டுள்ளது. கழகத்தின் ஒவ்வொரு அணியினரும் பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். அதே போல் பெண்களுக்கு தேவையான உதவிகள் செய்ய, புதிய பெண் உறுப்பினர்களை சேர்க்க முதல்வர் கூறியதன் பேரில், மாநில மகளிர் அணி தலைவி எம்.பி. கனிமொழி வழிகாட்டுதலில், இணையவழியில் புதிய பெண் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. 33 வார்டுகளிலும் பெண்கள் தி.மு.க. மகளிர் அணியில் ஆர்வத்துடன் சேர்ந்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நகர மகளிர் அணிஅமைப்பாளர் ராதிகா,செல்வி, கவுன்சிலர்கள் சத்தியசீலன்,கதிரவன் சேகர், ரங்கநாதன், நிர்வாகிகள் குமார், ரவி, தனக்கோடி, வெங்கடேசன், பிரேம்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture