ஜெயலலிதா கூட பர்கூரில் தோற்றார் நாம் எப்பவும் வெற்றி பெறுவோம் வரவேற்பு கூட்டத்தில் மாவட்ட தி.மு.க. செயலர் பேச்சு

ஜெயலலிதா கூட பர்கூரில் தோற்றார்   நாம் எப்பவும் வெற்றி பெறுவோம்   வரவேற்பு கூட்டத்தில் மாவட்ட தி.மு.க. செயலர் பேச்சு
X
ஜெயலலிதா கூட பர்கூரில் தோற்றார் நாம் எப்பவும் வெற்றி பெறுவோம் என குமாரபாளையத்தில் நடந்த வரவேற்பு கூட்டத்தில் மாவட்ட தி.மு.க. செயலர் மூர்த்தி பேசினார்.

ஜெயலலிதா கூட பர்கூரில் தோற்றார்

நாம் எப்பவும் வெற்றி பெறுவோம்

வரவேற்பு கூட்டத்தில் மாவட்ட தி.மு.க. செயலர் பேச்சு


ஜெயலலிதா கூட பர்கூரில் தோற்றார் நாம் எப்பவும் வெற்றி பெறுவோம் என குமாரபாளையத்தில் நடந்த வரவேற்பு கூட்டத்தில் மாவட்ட தி.மு.க. செயலர் மூர்த்தி பேசினார்.

தி.மு.க. மேற்கு மாவட்ட செயலராக இருந்த மதுரா செந்தில் மாற்றப்பட்டு, அந்த இடத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி நியமனம் செய்யப்பட்டார். இவர் நேற்று குமாரபாளையம் வருகை தந்தார். இவருக்கு வடக்கு மற்றும் தெற்கு தி.மு.க. சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட பொருளர் ராஜாராம், முன்னாள் நகர செயலர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் மகளிரணியினர் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் மாவட்ட செயலர் மூர்த்தி பேசியதாவது:

நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து 2026ல் வெற்றியை பெற வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட பர்கூரில் தோற்றார், நாம் எப்பவும் வெற்றி பெறுவோம். தி.மு.க.வலுவான கட்சி. யாரும் நம்மை வெல்ல விடாமல், அயராது பாடுபட்டு வெற்றி பெற வேண்டும். முதல்வர் சொல்லித்தான் அனுப்பி வைத்துள்ளார். எதுக்கு நீக்கம் செய்து, மீண்டும் உங்களை மீண்டும் நியமித்து உள்ளேன், என்பது உங்களுக்கு தெரியும். மூன்று தொகுதி வெற்றியுடன் வந்து என்னை பார்க்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

படவிளக்கம் :

குமாரபாளையத்தில் நடந்த வரவேற்பு கூட்டத்தில் நாமக்கல் எற்மேற்கு மாவட்ட செயலர் மூர்த்திக்கு நிர்வாகிகள் அனைவரும் சால்வை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story
ai healthcare products