குமாரபாளையம் அறநிலையத்துறை செயல் அலுவலரை மாற்ற தி.மு.க. கோரிக்கை

குமாரபாளையம் அறநிலையத்துறை செயல் அலுவலரை மாற்ற தி.மு.க. கோரிக்கை
X

 எம். செல்வம், நகர தி.மு.க. பொறுப்பாளர், குமாரபாளையம்

குமாரபாளையம் அறநிலையத்துறை செயல் அலுவலரை மாற்ற தி.மு.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் அறநிலையத்துறை செயல் அலுவலரை மாற்ற தி.மு.க. கோரிக்கை சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம் கூறியதாவது:

குமாரபாளையம் நகரில் அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்கள் பல உள்ளன. இதன் செயல் அலுவலராக சிவகாமி பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு விபத்து ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்தார்.

ஓரிரு நாளில் இவர் மீண்டும் இதே பணியில் ஈடுபட போவதாக கூறப்படுகிறது. இவரது பணி காலத்தில் செயல்பாடுகள் சரியில்லை என பல தரப்பாரும் புகார் கூறியுள்ளனர்.

குமாரபாளையம் கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு உரிய சம்பளம் அந்தந்த மாதம் வழங்கப்பட வேண்டும், கோவில்களில் வழக்கமாக நடைபெறும் பூஜைகள் தவறாமல் நடைபெற வேண்டும்,

கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளிட்ட சொத்துகள் பாதுகாக்கப்படவேண்டும். இது போன்ற பணிகளை சிறப்பாக செயல்படுத்தும் அலுவலர் குமாரபாளையத்திற்கு நியமிக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர், தமிழக அறநிலையத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ, தாசில்தார் உள்ளிட்டவர்களுக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது.

ஈரோடு உதவி ஆணையர் மங்கையர்க்கரசியிடம் இது குறித்து நேரில் சென்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் அதே செயல் அலுவலரை நியமனம் செய்யாமல், சிறப்பாக செயல்படக்கூடிய செயல் அலுவலரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி