தி.மு.க. பேச்சாளர் வெற்றிகொண்டான் பிறந்தநாள் விழா

தி.மு.க. பேச்சாளர் வெற்றிகொண்டான்   பிறந்தநாள் விழா
X

குமாரபாளையம் தி.மு.க.சார்பில் கொண்டாடப்பட்ட தி.மு.க. பேச்சாளர் வெற்றிகொண்டான் பிறந்தநாள் விழா 

குமாரபாளையம் தி.மு.க.சார்பில் தி.மு.க. பேச்சாளர் வெற்றிகொண்டான் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தி.மு.க. பேச்சாளர் வெற்றிகொண்டான் தன் பேச்சாற்றலால் அனைவரையும் தன் வசப்படுத்தும் திறன் மிக்கவர். அரசியலை நாடாத நபர்கள் கூட பெருமளவில் பங்கேற்று இவர் பேச்சை கேட்பதுண்டு. இவரது நினைவாக குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் நினைவு கொடிகம்பம் மற்றும் உதயசூரியன் சின்னம் அமைக்கப்பட்டது.

தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால், தி.மு.க. கட்சி கொடி ஏற்றாமல், வெற்றிகொண்டான் நினைவு கல்வெட்டு படத்திற்கு மலர்மாலை அணிவித்து. இங்கு நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டது.

நிர்வாகிகள் அன்பரசு, ஞானசேகரன், முன்னாள் கவுன்சிலர்கள் ராமசாமி, விஸ்வநாதன், ரவி, முன்னாள் நகர செயலர் வெங்கடேசன், ஆனந்தன், ராஜ்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி