குமாரபாளையத்தில் அனுமதி இன்றி மரங்கள் வெட்டப்பட்டதாக தே.மு.தி.க. மனு
குமாரபாளையம் தொகுதி தே.மு.தி.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.
குமாரபாளையத்தில் தே.மு.தி.க. கட்சி சார்பில் பூத் கமிட்டி அமைத்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் தொகுதி தே.மு.தி.க. சார்பில் பூத் கமிட்டி அமைக்க மாவட்ட செயலாளர் விஜய் சரவணன் உத்தரவிட்டதன்படி, பூத் கமிட்டி அமைக்கும் ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் தலைமையில் நடந்தது. தொகுதியில் உள்ள அனைத்து பூத்களுக்கும் கமிட்டி அமைக்க வேண்டும், வரவிருக்கும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாமில், அந்தந்த பகுதி மக்களுக்கு, வார்டு நிர்வாகிகள் உதவிட வேண்டும், குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும், பழுதான சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும், வடிகால்கள் இல்லாத இடத்தில் வடிகால் அமைக்க வேண்டும், சேதமான வடிகால்களை சீரைமைக்க வேண்டும், சாலை மற்றும் வடிகால் அமைக்க மரங்களை வெட்டுவதை தவிர்க்க, ஒப்பந்ததாரர்களுக்கு நகராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும், தீபாவளி நெருங்குவதால் பிரதான சாலைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்து, சமூக விரோதிகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் குமாரபாளையம், பள்ளிபாளையம், ஒன்றிய நிர்வாகிகள் நாராயணசாமி, நாகராஜன், மணியண்ணன், வெள்ளிங்கிரி, வேலுமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் கண்ணகி நகர் பகுதியில் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிக்காக அப்பகுதியில் 6 மரங்கள் அரசு அனுமதி இல்லாமல் இரவோடு இரவாக வெட்டப்பட்டு, வெட்டப்பட்ட மரங்கள் கொண்டு செல்லப்பட்டன. இதனால் தே.மு.தி.க. சார்பில் குமாரபாளை யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, நகராட்சி ஆணையர் சரவணன் ஆகியோர் வசம், தே.மு.தி.க. மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் மரக்கிளைகளை உடலில் கட்டிக்கொண்டு நூதன முறையில் மனுக்கள் கொடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu