தி.மு.க. சார்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டம்

தி.மு.க. சார்பில்    தெருமுனைப் பிரச்சார கூட்டம்
X
குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க. சார்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடந்தது.

தி.மு.க. சார்பில்

தெருமுனைப் பிரச்சார கூட்டம்

குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க. சார்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடந்தது.

குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 72 ம் ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மூர்த்தி அறிவுறுத்தல்படி தெருமுனைப் பிரச்சார கூட்டம் காளியம்மன் கோவில் மைதானத்தில், நகராட்சி தலைவர், வடக்கு நகர தி.மு.க பொறுப்பாளர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில்

சிறப்பு பேச்சாளர் சேலம் சுஜாதா பங்கேற்று, ஒன்றிய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்யும் வகையில் மும்மொழிக் கொள்கை, பாராளுமன்றத் தொகுதி சீரமைப்பு உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை திணிப்பதை கண்டித்தும், அ.தி.மு.க.வை கண்டித்தும் பேசினார். நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், நகர பொறுப்பு குழு உறுப்பினர் ராஜ்குமார், கவுன்சிளர் ஜேம்ஸ், மகளிரணியினர் உள்பட பலர் பங்கேற்றனர்.

படவிளக்கம் :

குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க. சார்பில் நடந்த தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர் சேலம் சுஜாதா பேசினார்.

Next Story