இரு கோஷ்டிகளாக ஸ்டேஷனை முற்றுகையிட்ட குமாரபாளையம் திமுகவினர்

இரு கோஷ்டிகளாக ஸ்டேஷனை முற்றுகையிட்ட குமாரபாளையம் திமுகவினர்
X

குமாரபாளையத்தில், திமுகவின்  இரு கோஷ்டியினர்,  போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

பெண்ணை கிண்டல் செய்த விவகாரத்தில், இரு கோஷ்டிகளாக திமுகவினர், குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

குமாரபாளையம் கே.ஒ.என்.தியேட்டர் பகுதியில் வசிப்பவர் கனகராஜ், 38. கூலித்தொழிலாளி. தி.மு.க.வை சேர்ந்தவர். இவர், அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு, போவோர் வருபவர்கள், அப்பகுதி பெண்களை கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து புகார் எழுந்த நிலையில், கனகராஜ் தனது ஆதரவாளர்களுடன் குமாரபாளையம் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.

இதுபற்றி தகவலறிந்த திமுகவின் மற்றொரு அணியினர், குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனிடையே, தகவல் அறிந்து அங்கு வந்த நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம், திமுகவின் இரு கோஷ்டியினரிடமும் பேசி, சமரசம் ஏற்படுத்தி வைத்தார். அதன் பின்னரே, திமுகவின் இரு அணியினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!