குமாரபாளையம் மார்க்கெட் நிலத்தை பிரித்து ஆவணம் வழங்க தி.மு.க.வினர் மனு

குமாரபாளையம் மார்க்கெட் நிலத்தை பிரித்து ஆவணம் வழங்க தி.மு.க.வினர் மனு
X

குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்டில் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., இளவரசி ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் மார்க்கெட் நிலத்தை பிரித்து ஆவணம் வழங்க தி.மு.க. சார்பில் ஆர்.டி.ஒ., விடம் மனு வழங்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் மார்க்கெட் நிலத்தை பிரித்து ஆவணம் வழங்க தி.மு.க. சார்பில் ஆர்.டி.ஒ., விடம் மனு வழங்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள்தான் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் கட்டுமானங்கள் மிகவும் சேதமாகியுள்ளன. இதனை புதுப்பித்து புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டுமானால் பஸ் ஸ்டாண்டில் வளாகத்தில் இருந்து மார்க்கெட் இடத்தை பிரித்து ஆவணம் செய்தால் மட்டுமே அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மார்க்கெட் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் என கூறப்படுகிறது.

இதனால் குமாரபாளையம் மார்க்கெட் நிலத்தை பிரித்து ஆவணம் வழங்க தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம் சார்பில் ஆர்.டி.ஒ. விடம் மனு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து செல்வம் கூறுகையில், குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதனை சப் டிவிசன் செய்தல் மட்டுமே, மார்க்கெட் மேம்பாட்டு பணிகளுக்கு நிதி உதவி கிடைக்கும் என கூறப்படுகிறது. தினசரி காய்கறி மார்க்கெட்ட்டில் கான்கிரீட் கட்டடங்கள் கட்டி, சிமெண்ட் தரை தளம் அமைத்து மேம்பாடு பணிகள் செய்ய வேண்டியுள்ளது.

தற்போது கூரை கொட்டகை, சிமெண்ட் அட்டைகள் போட்ட கடைகள் என இருப்பதால் மழைக்காலங்களில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. காய்கறிகளும் சேதமாகும் நிலை ஏற்பட்டு, வியாபாரிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. மேலும் காய்கறிகள் பாதுகாத்திடக் குளிர்சாதன கிடங்கு அமைத்துத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே மார்க்கெட் மேம்பாடு பணிகள் நடந்திட இந்த இடத்தை சப் டிவிசன் செய்து தர கோரி, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ.விடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். இது சம்பந்தமாக, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. இளவரசி நேரில் வந்து ஆய்வு செய்தார். இவருடன் தாசில்தார் தமிழரசி, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ. முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர் என அவர் கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture