கொரோனா தடுப்பூசிகளை அதிகப்படுத்தக்கோரி நாமக்கல் ஆட்சியரிடம் திமுக சார்பில் மனு

கொரோனா தடுப்பூசிகளை அதிகப்படுத்தக்கோரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம், பள்ளிபாளையம் நகர திமுக செயலாளர் ரவி மனு வழங்கினார்.
பள்ளிபாளையம் பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து மனு அளிப்பதற்காக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்கை, பள்ளிபாளையம் நகர திமுக செயலாளர் அ.ரவி, சந்தித்து, கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தார்.
அந்த மனுவில், தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தடுப்பூசிகள் இல்லாததால், பலரும் காத்திருந்து, ஏமாற்றம் அடைகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகளை பள்ளிபாளையம் பகுதியில் அதிகமாக வழங்க வேண்டும்.
பள்ளிபாளையம் காவிரி ஆற்று நீரில், மாசுபடுத்தும் விஷச்செடிகளான ஆகாயத்தாமரை செடிகள் பரவியுள்ளன. அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று, குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu