தி.மு.க. சார்பில் சமூக வலைதள பயிற்சி பாசறை கூட்டம்

படவிளக்கம் :
குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நடந்த சமூக வலைதள பயிற்சி பாசறை கூட்டத்தில் ஈரோடு எம்.பி.பிரகாஷ் பேசினார்.
தி.மு.க. சார்பில் சமூக வலைதள பயிற்சி பாசறை கூட்டம் - குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் சமூக வலைதள பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் தனியார் மண்டபத்தில், தி.மு.க. சார்பில் குமாரபாளையம் மேற்கு மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாக இளைஞர்களுக்கு சமூக வலைதள பயிற்சி பாசறை வகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தி.மு.க. குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளர் சந்திரகுமார், ஈரோடு பாராளுமன்ற எம்பி பிரகாஷ், திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா பங்கேற்று, சமூக வலைதளத்தில் தி.மு.க.வினர் பணியாற்ற வேண்டிய விதம் குறித்து பயிற்சி வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu