குமாரபாளையம் நகர புதிய திமுக நிர்வாகிகள் தேர்வு

குமாரபாளையம் நகர புதிய திமுக நிர்வாகிகள் தேர்வு
X

செல்வம், தி.மு.க. நகர செயலர்.

தி.மு.க. சார்பில் குமாரபாளையம் நகர புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் தி.மு.க. சார்பில், வார்டு நிர்வாகிகள் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நகர நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், மீண்டும் முன்னாள் நகர பொறுப்பாளர் செல்வம், நகர செயலராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், திமுக அவைத் தலைவராக ஜெகன்நாதன், நகர பொருளராக செல்வகுமார், நகர துணை செயலர்களாக ரவி, பன்னீர்செல்வம், ரேவதி விஸ்வநாதன், மாவட்ட பிரதிநிதிகளாக கவுன்சிலர்கள் சத்தியசீலன், ரங்கநாதன் மற்றும் வடிவேல் மேலும் செயற்குழு உறுப்பினர்கள் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய திமுக நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலர் மூர்த்தி, குமாரபாளையம் அனைத்து கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!