துணிகளை அயர்ன் செய்து கொடுத்து ஓட்டு கேட்ட தி.மு.க. வேட்பாளர்

துணிகளை அயர்ன் செய்து கொடுத்து ஓட்டு கேட்ட தி.மு.க. வேட்பாளர்
X

குமாரபாளையத்தில் துணிகளை அயர்ன் செய்து கொடுத்து 1வது வார்டு தி.மு.க. வேட்பாளர் விஜயா ஓட்டு கேட்டார்.

குமாரபாளையத்தில் துணிகளை அயர்ன் செய்து கொடுத்து 1வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ஓட்டு கேட்டார்.

குமாரபாளையம் ஒன்றாவது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் விஜயா ராஜமாணிக்கம். இறுதி கட்ட பிரசாரத்தில் வார்டு பிரதிநிதி முன்னாள் கவுன்சிலர் ராமசாமி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஒன்றிய செயலர் வெப்படை செல்வராஜ் பங்கேற்று வாக்காளர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தனது வார்டில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது துணிகளை அயர்ன் செய்பவர் வீட்டில் ஓட்டு கேட்க சென்ற வேட்பாளர் விஜயா, துணிகளை அயர்ன் செய்து கொடுத்து நூதன முறையில் ஓட்டு கேட்டார். முன்னாள் நகர செயலர் ஜெயபிரகாஷ், மல்லை ராமனாதன், வார்டு பொறுப்பாளர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்