குமாரபாளையத்தில் தி.மு.க. மகளிரணி ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் தி.மு.க. மகளிரணி ஆலோசனை கூட்டம்
X

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் மகளிரணி ஆலோசனை கூட்டம் நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. 

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் மகளிரணி ஆலோசனை கூட்டம் நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் மகளிரணி ஆலோசனை கூட்டம் நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் களம் காண்போம் வா என்ற திட்டத்தின் கீழ் புதிதாக சேர்ந்த கவுரி, மகாலட்சுமி, வனிதாமணி, புவனேஸ்வரி, உமா ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

செல்வம் பேசுகையில், தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நன்மைகள் அதிகம் செய்திட வேண்டும் என்றுதான் களம் காண்போம் வா, திட்டம் கீழ் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதி மகளிரணியினர் , ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், முதியோர் உதவி தொகை விண்ணப்பித்தல் , வாரிசு, ஜாதி சான்று, பிறப்பு, இறப்பு சான்று பெற விண்ணப்பித்தல் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டும்.

கட்சியின் கொள்கைகள் குறித்து விளக்கிட வேண்டும். கட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள், தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாக்கள், திட்டம் துவக்கம் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அந்தந்த [பகுதி சாலை, குடிநீர், வடிகால், உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் குறித்து அந்தந்த வார்டு கவுன்சிலர்களிடம் அல்லது நகராட்சி அதிகாரிகளிடம் சொல்லி பணிகளை செய்திட உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கவுன்சிலர்கள் சத்தியசீலன், கதிரவன், அம்பிகா, தீபா, ரங்கநாதன், நிர்வாகிகள் பரமசிவம், அன்பரசு, ரவி, ராஜ்குமார், சரவணன், மகளிரணி நிர்வாகிகள் ஈஸ்வரி, ராதிகா நகர உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!