குமாரபாளையத்தில் தி.மு.க.அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்

குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது.
குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் அரசின் சாதனை விளக்க பிரச்சார தெருமுனை கூட்டம் நடைபெற்றது.இந்த பிரச்சார கூட்டத்திற்கு நகர பொறுப்பாளர்கள் செல்வம், ஞானசேகரன் தலைமை தாங்கினார்கள். சிறப்பு பேச்சாளராக தலைமைக்கழக பேச்சாளர் சுஜாதா பங்கேற்று, தி.மு.க. அரசின் இரண்டாண்டு சாதனைகள் குறித்து பேசினார்.
இவர் பேசும்போது மகளிற்கு இலவச பஸ், கல்வி உதவி தொகை, உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தமிழகத்தின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கிறது, என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் நிறைவையொட்டி தொண்டர்களுக்கு கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில், பத்தாண்டுகால ஆட்சியை விரட்டி, நாம் விடியல் தருவோம் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியை தந்து, ஆட்சி செய்வதற்கான அனுமதியை வழங்கினார்கள். ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து, அவர்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில், ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 மே 7ம் நாள் முதல் ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் நலனை மனதில் கொண்டு நிறைவேற்றி வருகிறது நமது அரசு என்றார்.
இதில் நிர்வாகிகள் அன்பழகன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ், வேல்முருகன், கிருஷ்ணவேணி, அம்பிகா, பரிமளம், சியாமளா, சுமதி, ராஜ், உள்ளிட்ட நகர தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu