தி.மு.க. வடக்கு நகர தேர்தல் பணிமனை திறப்பு : எம்.பி. கணேசமூர்த்திக்கு மௌன அஞ்சலி..!

தி.மு.க. வடக்கு நகர தேர்தல் பணிமனை திறப்பு : எம்.பி. கணேசமூர்த்திக்கு மௌன அஞ்சலி..!
X

குமாரபாளையத்தில் தி.மு.க. வடக்கு நகரம் சார்பில் நடந்த, தேர்தல் பணிமனை திறப்பு விழாவில், மாவட்ட தி.மு.க. செயலர் மதுரா செந்தில், தேர்தல் பொறுப்பாளர் தங்கராசு சேர்ந்து, தேர்தல் பணிமனையை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

குமாரபாளையம் தி.மு.க. வடக்கு நகர தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் எம்.பி. கணேசமூர்த்தி மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

குமாரபாளையம் தி.மு.க. வடக்கு நகர தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் எம்.பி. கணேசமூர்த்தி மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

லோக்சபா தேர்தல் வருவதையொட்டி அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனு தாக்கல் செய்த பின், அந்தந்த பகுதி வேட்பாளர்கள் பொதுமக்கள் மத்தியில் வந்து தேர்தல் பிரச்சாரம் செய்யும் பணியை துவக்கி வருகின்றனர். குமாரபாளையத்தில் தி.மு.க. வடக்கு நகரம் சார்பில் நடந்த தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் வடக்கு நகர பொறுப்பாளரும், நகராட்சி தலைவருமான விஜய்கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தி.மு.க. செயலர் மதுரா செந்தில், தேர்தல் பொறுப்பாளர் தங்கராசு, ரிப்பன் வெட்டி தேர்தல் அலுவலம் திறந்து வைத்தனர். எம்.பி. கணேசமூர்த்தி மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மதுரா செந்தில் பேசியதாவது:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பது போல் அதை செய்தேன், இதை செய்தேன் என பேசி ஓட்டு வாங்கி வந்தார். நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்த பணிகள் இந்த பக்கம் முழுதும் பிளெக்ஸ் பேனர் வைக்கப்படுள்ளது. தமிழக அரசின் சாதனைகள் முழுதும் மறுபக்கம் பிளெக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவரால் சொல்ல முடியுமா? தி.மு.க. அரசின் சாதனைகள் எடுத்து சொல்லி முன்பு வாங்கிய ஓட்டுக்களை விட, இரு மடங்கு ஓட்டுக்கள் வாங்கி, வேட்பாளர் பிரகாஷ் வெற்றிபெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பேசியதாவது:

முன்னாள் அமைச்சர் தங்கத்தை வைத்துகொண்டு மணியை மட்டும் கொடுத்து, அடிக்கச்சொல்லி சென்று விட்டார். அந்த மணியை ஆலயமணியாக மாற்றி காட்டுவோம். அப்போது நீங்கள் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள், நாங்கள் தான் இருப்போம். குமாரபாளையம் இனி தி.மு.க.வின் கோட்டை என்று நிரூபிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் நகர தலைவர் ஜானகிராமன், சி.பி.ஐ. நகர செயலர் கணேஷ்குமார், சி.பி.எம். நகர செயலர் சக்திவேல், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலர் காமராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, தி.மு.க. மகளிரணி தேவி, ராதிகா உள்ளிட்ட பலர் குத்துவிளக்கேற்றினர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!