பாரபட்சமின்றி வார்டு பணிகள் செய்த சேர்மனுக்கு திமுக கவுன்சிலர் பாராட்டு

பாரபட்சமின்றி வார்டு பணிகள் செய்த சேர்மனுக்கு   திமுக கவுன்சிலர் பாராட்டு
X

குமாரபாளையம் 21வது வார்டில் பாரபட்சமின்றி பணிகள் செய்து கொடுத்த சேர்மனுக்கு தி.மு.க. கவுன்சிலர் பரிமளம் தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.

குமாரபாளையம் 21வது வார்டில் பாரபட்சமின்றி பணிகளை செய்து கொடுத்த சேர்மனுக்கு திமுக கவுன்சிலர் பாராட்டு தெரிவித்தார்.

குமாரபாளையம் நகராட்சி 33 வார்டுகளை கொண்டது. இதில் சேர்மனாக தி.மு.க.வை சேர்ந்தவர்கள் இருந்து வந்த நிலையில், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரில் சந்தித்து அ.தி.மு.க. உறுப்பினராகி அ.தி.மு.க. சேர்மனாக தனசேகரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவரையடுத்து தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? என இருந்த நிலையில் சுயேட்சையாக போட்டியிட்ட விஜய்கண்ணன் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலர்கள் ஆதரவுடன் யாரும் எதிர்பாரத வகையில் சேர்மனாக பொறுப்பேற்றுக் கொண்டார். நகரில் உள்ள 33 வார்டுகளும் தனது வார்டாக எண்ணித்தான் பணியாற்றுவேன், ஆதரவு தந்தவர், ஆதரவு தராதவர் வார்டுகள் என பாரபட்சம் பார்க்க மாட்டேன் என பதவியேற்கும் போது சேர்மன் விஜய்கண்ணன் கூறினார்.

அதன்படி தி.மு.க. வார்டான 21வது வார்டில் தேவையான பணிகளை செய்து கொடுத்தார். இதனை பாராட்டும் விதமாக கவுன்சிலர் பரிமளம் மற்றும் கணவர் கந்தசாமி உள்ளிட்ட அதரவாளர்கள் சேர்மன் விஜய்கண்ணனுக்கு சால்வை அணிவித்து நன்றி கூறினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்