மாணவர்களுக்கு டிபன் பாக்ஸ்- குமாரபாளையம் திமுக கவுன்சிலர் தாராளம்!

மாணவர்களுக்கு டிபன் பாக்ஸ்- குமாரபாளையம் திமுக கவுன்சிலர் தாராளம்!
X

டிபன் பாக்ஸ் பெற்றுக் கொண்ட குழந்தைகளுடன் கவுன்சிலர் ராஜு. 

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, தி.மு.க கவுன்சிலர் தனது முதலாவது ஊதியத்தில் டிபன் பாக்ஸ் வாங்கி கொடுத்தார்.

குமாரபாளையம் நகராட்சி, 6வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் ராஜூ. இவர், நகரமன்ற கூட்டத்தில் பங்கேற்றமைக்காக, நகராட்சி சார்பில் ஊதியம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தனது முதல் ஊதியத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு டிபன் பாக்ஸ் மற்றும் நோட்டுக்களை, கவுன்சிலர் ராஜூ வாங்கி கொடுத்தார். அத்துடன், அவற்றை தனது கையால் குழந்தைகளுக்கு கொடுத்து குதூகலப்படுத்தினார். இதனால், மாணவ, மாணவியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அவருக்கு குழந்தைகள், பள்ளி ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி