அமித்சாவை கண்டித்து தி.மு.க. மற்றும் சி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்
அமித்சாவை கண்டித்து தி.மு.க. மற்றும் சி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்
குமாரபாளையத்தில் அமித்சாவை கண்டித்து தி.மு.க. மற்றும் சி.பி.ஐ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
குமாரபாளையத்தில் சட்ட மாமேதை அம்பேத்காரை அவமதித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சாவை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்.நடத்தினர். தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் நகரப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட தி.மு..க.வினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஒன்றிய அமைச்சர் அமீத்ஷாவை கண்டித்தும் அமித் ஷா பதவி விலகக் கோரியும் கோஷமிட்டனர்.
இதே போல் சி.பி.ஐ. சார்பில் அமித்ஷாவை கண்டித்து நகர செயலர் கணேஷ்குமார் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. அமித்ஷாவை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் அசோகன், விசை ஆனந்த், இரவு, சேகர், பூபதி, அம்சவேணி, கேசவன், உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu