குமாரபாளையத்தில் கருணாநிதி வேடமணிந்து தி.மு.க.வினர் பிரச்சாரம்

குமாரபாளையத்தில் கருணாநிதி வேடமணிந்து தி.மு.க.வினர் பிரச்சாரம்
X

குமாரபாளையம் 19வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ரம்யா, தனது பிரசாரத்தின் போது, கருணாநிதி வேடமிட்ட நபருடன் சென்று பொதுமக்களை சந்தித்து ஒட்டு கேட்டு வருகிறார்.

குமாரபாளையம் 19வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ரம்யா, தனது பிரசாரத்தின் போது, கருணாநிதி வேடமிட்டவருடன் சென்று பொதுமக்களை சந்தித்து ஒட்டு கேட்டு வருகிறார்.

குமாரபாளையம் நகரில் பல்வேறு கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒவ்வொருவரும் பொதுமக்களை கவரும் வகையில் பிரச்சாரம் செய்ய பல வழிகளை கையாண்டு வருகின்றனர்.

இந்நிலையில், 19வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ரம்யா, தனது பிரசாரத்தின் போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி வேடமிட்ட நபருடன் சென்று பொதுமக்களை சந்தித்து ஒட்டு கேட்டு வருகிறார்.

கருணாநிதி வேடமிட்ட நபரை காண பொதுமக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்து வருகின்றனர். தம்மண்ணன் வீதி, புத்தர் வீதி, பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ரம்யா பிரச்சாரம் செய்தார். வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து, இந்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என உறுதி கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!