குமாரபாளையத்தில் தறி ஓட்டி பிரச்சாரம் செய்த திமுக வேட்பாளர்

குமாரபாளையம் 5வது வார்டு பகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் சுமதி, அப்பகுதியில் உள்ள விசைத்தறி பட்டறையில், தறி ஓட்டி வாக்கு சேகரித்தார்.
குமாரபாளையம் 5வது வார்டு பகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுபவர் சுமதி. பி.எஸ்.சி., பி.எட்., எம்.எஸ்.சி., பட்டதாரி. இவர் விசைத்தறி தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவர். பொதுமக்களிடம் ஓட்டு கேட்டு வந்த போது, அங்கிருந்த ஒரு விசைத்தறி பட்டறையில் தறி ஓட்டியும், தார் ஓட்டியும், வைண்டிங் மெசின் ஓட்டியும் அப்பகுதி மக்களை கவர்ந்தார்.
வேட்பாளர் சுமதி கூறுகையில், விசைத்தறி தொழிலாளர் துன்பத்தை போக்க பாடுபடுவேன், விசைத்தறி தொழில் முன்னேற்றம் காண அனுபவம் மிக்கவர்களிடம் ஆலோசனை கேட்டு நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார். அப்பகுதி விசைத்தறி தொழிலாளர்களிடம் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu