தி.மு.க. சார்பில் குஷ்பூவை கண்டித்து மகளிரணி சார்பில் உருவ பொம்மை எரிப்பு போராட்டம்..!

தி.மு.க. சார்பில் குஷ்பூவை கண்டித்து மகளிரணி சார்பில் உருவ பொம்மை  எரிப்பு போராட்டம்..!
X

குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் குஷ்பூவை கண்டித்து மகளிரணி சார்பில் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடந்தது.

குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் குஷ்பூவை கண்டித்து மகளிரணி சார்பில் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடந்தது.

தி.மு.க. சார்பில் குஷ்பூவை கண்டித்து மகளிரணி சார்பில் உருவ பொம்மை எரிப்பு போராட்டம்

குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் குஷ்பூவை கண்டித்து மகளிரணி சார்பில் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடந்தது.

தமிழகத்தில் தி.மு.க. அரசு சார்பில் மகளிருக்கு உரிமை தொகை எனும் பெயரில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அவமதிக்கும் வகையில் திரைப்பட நடிகை குஷ்பூ பேசியதற்கு எதிர்ப்பு மாநிலம் முழுதும் வலுத்து வருகிறது. குஷ்பூவை கண்டிக்கும் விதமாக குமாரபாளையம் தி.மு.க. சார்பில், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன் தலைமையில், மகளிரணி நிர்வாகிகள் ராதிகா, தேவிமணி உள்ளிட்ட பலர் பங்கேற்று, குஷ்பூவின் உருவ பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். குஷ்பூவிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. உருவ பொம்மை எரித்த போது, போலீசார் அதனை தடுக்க முயற்சித்தனர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் அறிவுறுத்தலின்படி, குமாரபாளையம் தெற்கு நகர கழகத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் தி.மு.க குமாரபாளையம் தொகுதி செயல் அலுவலகத்தில் நகர பொறுப்பாளர் ஞானசேகர் தலைமையில் நடந்தது. அனைத்து கிளைகளிலும் மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கை செய்திட கிளைக்கழக செயல் மறவர்களுக்கு, மாவட்ட மகளிர் அணி துணையமைப்பாளர் கயல்விழி முன்னிலையில் உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது. பொறுப்புக்குழு உறுப்பினர் இரவி,

தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட இலக்கிய அணி நிர்வாகி கவிஞர் மல்லை ராமநாதன், கவுன்சிலர்கள் ரங்கநாதன், அழகேசன், அம்பிகா, பொறுப்புக்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட இளைஞரணி துணையமைப்பாளர் கதிரவன்சேகர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராதிகா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story