தி.மு.க.வினர் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

தி.மு.க.வினர் வாக்குச்சாவடி முகவர்கள்   ஆலோசனைக் கூட்டம்
X
குமாரபாளையம் தி.மு.க.வினர் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

தி.மு.க.வினர் வாக்குச்சாவடி முகவர்கள்

ஆலோசனைக் கூட்டம்


குமாரபாளையம் தி.மு.க.வினர் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

குமாரபாளையம் நகர தி.மு.க சார்பில் வடக்கு மற்றும் தெற்கு நகரங்களுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு குழுவினருக்கான ஆலோசனைக் கூட்டம், தெற்கு பொறுப்பாளர் ஞானசேகரன் மற்றும் வடக்கு பொறுப்பாளர் மற்றும் நகராட்சி தலைவர் விஜயகண்ணன் ஆகியோர் தலைமையில் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்காளர் சரி பார்ப்பு குழுவினர் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி பங்கேற்று, பல ஆலோசனைகளை வழங்கினார். மூர்த்தி பேசியதாவது:

கடந்த 2006 ஆம் ஆண்டு முறையாக தேர்தல் பணிகள் செய்யாததால் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி கைவிட்டு சென்று விட்டது. இது இந்த நான்கு சட்டமன்ற தேர்தலிலும் நமக்கு சிறந்த பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியை தி.மு.க வசம் தக்க வைக்க வேண்டும். அதற்கு அனைவரும் துணையாக பாடுபட வேண்டும். முன்னதாக வீடு வீடாக சென்று வாக்காளர்களை பார்த்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, நமது தி.மு.க தலைமையிலான , பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவ மாணவிகளுக்கு செய்த உதவிகளையும் மற்றும் பெண்களுக்கு இலவச பஸ், உரிமைத்தொகை வழங்கியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து சொல்லி, வாக்குகளை சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தெற்கு மற்றும் வடக்கு நகர பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

படவிளக்கம் :

குமாரபாளையம் தி.மு.க.வினர் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலர் மூர்த்தி பேசினார்.

Next Story