மின் கட்டண உயர்வை கண்டித்து குமாரபாளையத்தில் தே.மு.தி.க ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து குமாரபாளையத்தில் தே.மு.தி.க ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து குமாரபாளையத்தில் தே.மு.தி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மின் கட்டண உயர்வை கண்டித்து குமாரபாளையத்தில் தே.மு.தி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மின் கட்டண உயர்வை கண்டித்து குமாரபாளையத்தில் தே.மு.தி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தே.மு.தி.க நாமக்கல் வடக்கு மாவட்டம் சார்பில் மின் கட்டண உயர்வு, ரேஷன் பொருட்கள் சரி வர வழங்காதது, காவிரி நீர் தர மறுக்கும் கன்னட அரசை கண்டித்து, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணைக்கிணங்க குமாரபாளையம், பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலர் விஜய்சரவணன் பங்கேற்று ஆர்பாட்டத்தை துவக்கி வைத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் விஜய் சரவணன் பேசியதாவது:

கடும் விலைவாசி உயர்வால் மக்கள் அவதிக்கு ஆளாகி வரும் நிலையில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வு பெரும் சுமையாக உள்ளது. குமாரபாளையம் பகுதியில் போதிய மின் பணியாளர்கள் இல்லாமல், புகார் கூறினாலும் வந்து பார்க்க மிகவும் கால தாமதம் செய்து வருகிறார்கள். போதிய ஆட்களை நியமித்து பணிகளை உடனுக்குடன் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேசன் கடைகளில் உணவு பொருட்கள் உரிய காலத்தில் விநியோகம் செய்வது இல்லை. சில பொருட்கள் வருவதும் இல்லை. இது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நகர செயலாளர் நாராயணசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் சக்திவேல், தனலட்சுமி, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குமார், மாநில கலை இலக்கிய அணி துணைச் செயலாளர் கணேசன், மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story