விலைவாசி உயர்வு: குமாரபாளையத்தில் தேமுதிக சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்

தே.மு.தி.க. சார்பில் குமாரபாளையம், பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நூதன கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்கக் வேண்டும், சாய நீர் காவிரியில் கலப்பதை தடுக்க பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, நாமக்கல் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில், குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நூதன கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட துணை செயலர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலர் விஜய்சரவணன் பங்கேற்று, ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். பாடை கட்டப்பட்டு அதில் மாலை அணிவிக்கப்பட்ட கேஸ் சிலிண்டர் வைக்கப்பட்டதுடன், சாயக்கழிவு நீர் பாட்டிலில் வைக்கப்பட்டும், மீண்டும் விறகு அடுப்பிற்கு மாறும் நிலை வந்துவிட்டதை தெரிவிக்கும் வகையில், அடுப்பு, பானை ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன.
நகரச் செயலர் நாராயணசாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலர் பாலு, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிக்குமார், மாவட்ட தொண்டர்படை நிர்வாகி செல்வராஜ், நிர்வாகிகள் மந்திரி, நாகராஜ், சேகர், முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu