குமாரபாளையத்தில் தே.மு.தி.க. சார்பில் 8 பேர் வேட்புமனு தாக்கல்

குமாரபாளையத்தில் தே.மு.தி.க. சார்பில் 8 பேர் வேட்புமனு தாக்கல்
X

தேமுதிக சார்பில் மனு தாக்கல் செய்தவர்கள். 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், குமாரபாளையத்தில் தே.மு.தி.க. சார்பில் 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

குமாரபாளையம் நகராட்சியில், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. தே.மு.தி.க. கட்சி சார்பில் தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர்களான ஆர்.சுந்தராம்பாள், எஸ். ரேணுகா, எஸ்.சுரேஷ்குமார், என்.கோமளா, வி. பழனி, என். வெள்ளியங்கிரி, எஸ். பன்னீர்செல்வம், எஸ். சாந்தி, வார்டுகள் முறையே 1,5,6,14,8,24,32,28 ஆகிய வார்டுகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நாமக்கல் மாவட்ட தேமுதிக செயலர் விஜய்சரவணன் வழிகாட்டுதல்படி வேட்புமனு தாக்கலின் போது, மாவட்ட துணை செயலர் மகாலிங்கம், நகர அவை தலைவர் மணியண்ணன், நகர செயலர் நாராயணசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
why is ai important to the future