அதிமுக சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, பரிசளிப்பு விழா

அதிமுக சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி,  பரிசளிப்பு விழா
X

பவானியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பவானியில் அதிமுக சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

சர்வதேச விளையாட்டு தினத்தையொட்டி அ.தி.மு.க. பவானி தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு, இளைஞர் பாசறை ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் இணைந்து நடத்திய போட்டிகள் கவுந்தப்பாடியில் நடைபெற்றது.

இதில் 9,13 மற்றும் 18 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் பொதுப்பிரிவுக்கு போட்டிகள் நடந்தப்பட்டன. இதில் 181 பேர் பங்கேற்றனர்.

6 சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு . முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பண்ணன், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மாவட்ட சதுரங்க சர்கிள் செயலர் ரமேஷ், உள்பட பலர் பரிசுகள் வழங்கினர்.

அதிமுக நிர்வாகிகள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் , ஈரோடு காஸ்மாஸ் ரோட்டரி சங்க தலைவர் சத்யா உள்ளிட்ட பலர் பங்கேற்று பரிசுகள் வழங்கினார்கள்.

Tags

Next Story