ரேசன் கடைகளில் வழங்கப்படவுள்ள கரும்புகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர்

ரேசன் கடைகளில் வழங்கப்படவுள்ள கரும்புகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் குமாரபாளையம் அருகே ரேசன் கடைகளில் வழங்கப்படவுள்ள கரும்புகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
குமாரபாளையம் அருகே நியாய விலை கடைகள் மூலம் தமிழக அரசு சார்பில் வழங்கப்படவுள்ள பொங்கல் தொகுப்பிற்கான கரும்புகளை தேர்வு செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் கரும்புகளை நேரில் பார்வையிட்டதுடன், விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் அதிகாரிகள், தவறு செய்யும்பட்சத்தில், அது குறித்து புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
தமிழக அரசு நியாய விலையை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் கரும்பு ஒன்றுக்கு 35 ரூபாய் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என்று விலை நிர்ணயம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,. குமாரபாளையம் அருகே உள்ள சமயசங்கிலி மற்றும் கலியனுர் பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்புகளை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்வதற்கான முதல் கட்டமாக, கரும்புகளை மாவட்ட கலெக்டர் .உமா. நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அவர் விவசாயிகளிடம் கரும்புகளை பயிரிட்ட காலம் மற்றும் நீர் பாய்ச்சும் முறை கரும்புகளுக்கு இடப்பட்ட உரங்களின் தன்மை என பல்வேறு கேள்விகளை கேட்டு அறிந்ததுடன், கரும்பு பயிரிட ஒரு ஏக்கருக்கு ஆகும் செலவு என்ன என்பதையும் கேட்டறிந்தார். கரும்புகளின் உயரம் மற்றும் அதன் திடம் ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்ட பின்னர்,
அவர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் தொகுப்புடன் கரும்புகள் வழங்க நாமக்கல் மாவட்ட விவசாயிகளிடமிருந்து கரும்புகளை வாங்கி, அவைகள் வழங்கப்படும். கடந்த ஆண்டினை காட்டிலும், இந்த ஆண்டு அதிக கரும்புகள் பயிரிடப்பட்டுள்து. தற்பொழுது 5 லட்சத்து 40 ஆயிரம் கரும்புகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்தாண்டு கரும்புகள் பற்றாக்குறையால் சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு நமது மாவட்டத்திலேயே அதன் தேவைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் கரும்புகள் பெற அதிகாரிகள் கையூட்டு பெற்றால், அவற்றை புகாராக தெரிவித்தால் உடனடியாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
கலெக்டர் ஆய்வின் போது வேளாண்மைத்துறை அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu