பாளையம் பகுதி பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

பாளையம் பகுதி பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
X

பள்ளிபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளிபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளிபாளையம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார். வெப்படை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 24.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் காத்திருப்பு கூடம், சுற்றுச்சுவர் பணிகளையும் 35.70 லட்சம் மதிப்பில் கூடுதல் வசதிகள் மேற்கொள்ளுதல் பணிகளையும் ஆய்வு செய்தார்.

ஆவாரங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 36.69 லட்சம் கூடுதல் வசதிகள் உள்ளிட்ட பணிகள் ஆய்வு செய்தார். மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடியதுடன், பள்ளியில் பராமரிக்கப்பட்டு வரும் பதிப்வேடுகளை ஆய்வு செய்தார். பி.டி.ஓ.-க்கள் கோவிந்தன், மலர்விழி உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!