குமாரபாளையம் அரசு கல்லூரி மாணவருக்கு மாவட்ட கலெக்டர் பரிசு வழங்கல்

குமாரபாளையம் அரசு கல்லூரி மாணவருக்கு மாவட்ட கலெக்டர் பரிசு வழங்கல்
X

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கலை மாணவர் மோகன்ராஜ் பேச்சுபோட்டியில் மூன்றாம் இடம் பெற்றதையொட்டி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பரிசுத் ரொக்கத்தொகை மற்றும் சான்றிதழை கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கி பாராட்டினார்.

குமாரபாளையம் அரசு கல்லூரி மாணவருக்கு மாவட்ட கலெக்டர் பரிசு வழங்கினார்.

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் 2021 - 2022 ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்கள் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடைபெற்றது.

இந்த பேச்சுப் போட்டியில் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்று வரும் மாணவர் மோகன்ராஜ் மூன்றாம் இடம் பெற்றார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் இதற்கான பரிசுத் ரொக்கத்தொகை மற்று ம் சான்றிதழை கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கி பாராட்டினார்.

இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்கோன்ர் ஜோதி, கல்லூரி முதல்வர் ரேணுகா உள்பட பலர் பங்கேற்று வாழ்த்தினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!