குமாரபாளையம்: திமுக சார்பில் திருநங்கைகளுக்கு மளிகைப்பொருள் வழங்கல்

குமாரபாளையத்தில், திமுக சார்பில் 30 திருநங்கைகளுக்கு மளிகைப்பொருள் வழங்க முடிவு செய்யப்பட்டு, முதல்கட்டமாக 10 பேருக்கு வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், கொரோனா கால ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு, அரிசி மற்றும் காய்கறிகள் தொகுப்புகள் வழங்க, திமுக சார்பில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, முதற்கட்டமாக இன்று, 10 திருநங்கைகளுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள் அடங்கிய தொகுப்பு, குமாரபாளையம் திமுக அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான திமுகவினர், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள், திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!